சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் வைகோ, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.  55 வாக்குறுதிகளுடன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டுவருவது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை, எட்டுவழிச் சாலை ரத்து என பல்வேறு அம்சங்கள் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பை எதிர்ப்போம், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும், தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை, நீட் தேர்வு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து, தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை

தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்ககவும்,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பாடுபடுவோம்,  ராஜீவ் கொலை குற்றவாளிகள் எழுவர் விடுதலை உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

MDMK Election Manifesto 2021