தெலுங்கு திரையுலகில் முக்கியமான குடும்பமாக திகழ்வது மறைந்த என்டிஆரினுடையது தான் .

அவரது மகன் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்டிஆர் அவர்களது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்று பரந்து விரிந்து தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

மகன் பாலகிருஷ்ணாவிற்கு வயது 61 என்றாலும், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, அஞ்சலி என ஜோடியுடன் தான் நடிப்பார் . அவருடன் ஜோடியாக நடித்தால் மார்க்கெட் இழப்பர் என ராசியும் அவருக்கு உண்டு.

இந்நிலையில் அவரின் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள். பலரது கரியரை அஸ்தமித்த அவருடன் ஜோடி சேர்ந்தால், தெலுங்கின் ராசியான நடிகை பட்டத்தை இழக்க நேரிடும். ஜோடி சேராவிட்டால் பாலையாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஏற்பதா மறுப்பதா? குழம்பிப் போயிருக்கிறார் ஸ்ருதிஹாசன் என சொல்லப்படுகிறது.

பாலகிருஷ்ணாவின் இந்த 107-வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, கோபிசந்த் மலினேனி இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார்