2019-ல் விக்ரம் குமார் இயக்கத்தில் நானி நடிப்பில் கேங் லீடர் என்ற படம் வெளியானது. ஆறு பேர் ஒரு திருட்டை செய்ய அதில் ஒருவன் மற்ற ஐவரையும் கொன்றுவிட்டு, மொத்த பணத்துடன் தப்பிக்கிறான். அந்த ஐந்து பேரின் காதலிகள் கொலையாளியை கண்டுபிடிக்க க்ரைம் கதை எழுத்தாளரான நானியின் உதவியை நாடுகின்றனர்.

2018-ல் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவ் மெக்குவின் இயக்கிய Widows என்ற படத்தின் கதையாகவே இருந்தது .விடோஸ் வெளியாகி சரியாக ஒரு வருடம் கழித்து 2019 செப்டம்பரில் வெளியானது கேங் லீடர் .

இந்தப் படத்தை தமிழ், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப் போவதாக இயக்குனர் விக்ரம் குமார் அறிவித்துள்ளார்.