தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான படம் ‘ஈஸ்வரன்’ .
இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
இந்த வருடம் திரையரங்கில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் வெற்றிகரமாக ஓட, 2021 ஜனவரியில் திரைக்கு வந்த ஈஸ்வரன் சுமாராகவே போனது.
தற்போது இதன் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. இப்படம் நாளை அதாவது ஜுன் 12-ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடிதளத்தில் வெளியாகிறது.