ஷாங்காய்

சீனா நாட்டில் நடைபெற உள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சூர்யா நடித்த படமும் நயன்தாரா நடித்த படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஷாங்காய் நகரில் வருடா வருடம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கமாகும்.  இந்த விழாவின் 24 ஆம் நிகழ்வு இந்த வருடம் நடைபெற உள்ளது.  இந்த விழா வரும் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சீன மொழிகளைத் தவிரப் பல உலக மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ் மொழி திரைப்படங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிரிவில் திரையிட இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்று நடிகை நயன்தாரா நடித்த கூழாங்கல் திரைப்படம் ஆகும்.  மற்றொன்று நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஆகும்.