பிரேக் டவுன் ஆனதா விஷால் – வரலட்சுமி காதல்?

Must read

”ஆடு பகை, குட்டி உறவு” என்ற அரதப்பழசான சொலடைக்கு, கண்ணுக்கு நேரான உதாரணமாக இருந்தவர் விஷால்தான்.
நடிகர் சங்கத் தேர்தலில் அப்பா சரத்குமாரை எதிர்த்து களமாடிய விஷால், மகள் வரலட்சுமியுடன் உறவாடியே வந்தார்.
“வரலட்சுமி என் சின்ன வயசு ஃப்ரண்ட்.  பட்.. ப்ரண்டுக்கு மேலே…” என்றெல்லாம் டயலாக் பேசினார்.
1470909725_vishal-varalaxmi-sarathkumar
ஆனால், சமீப நாட்களாக இந்த ஜோடிகளுக்குள் மனஸ்தாபம் என்று செய்திகள் வந்தன. நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் நீக்கப்பட சங்க செயலாளராக இருக்கும் விஷால்தான் முக்கிய காரணம். இதுதான் மனப்பிளவுக்கு காரணம் என்றார்கள்.
இப்போது அதை உறுதிப்படுத்துவது போல ட்விட்டியிருக்கிறார் வரலட்சுமி.
“காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன. ஒரு ஆண், தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார். .காதல் எங்கே?”  என்று ட்விட்டரில் சோகத்துடன் பதிவிட்டிருக்கிறார் வரலட்சுமி.
untitled
அவர் விஷாலைத்தான் சொல்கிறார் என்கிறார்கள்.  “தனது அப்பா சரத்தை, விஷால் எவ்வளவோ எதிர்த்தபோதும் வரலட்சுமி கவலைப்படவில்லை. ஆனால் சங்கத்தில் இருந்தே சரத் நீக்கப்பட்டது வரலட்சுமிக்கு உடன்பாடாக இல்லை. அதனால் விஷாலுடன் சண்டை போட்டார். அது பெரும் பிளவாகிவிட்டது. அவர்தான் முதலில் விலகினார். ஆனால் தற்போது விஷால் மீது பழி போடுகிறார்” என்கிறார்கள்.
காதலை, பாசம் வென்றுவிட்டது.

More articles

Latest article