சென்னை: பாமகவின் மிரட்டலைத்தொடர்ந்து, அதிமுகஅரச, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக  கோரி வந்தது. இது தொடர்பாக, கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தது. மேலும், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமென்றால், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.  இது தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமகநிர்வாகிகள் சந்தித்து  மனுக்களையும் வழங்கினர். பாமகவின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதைத் தொடர்ந்து, 2020 டிசம்பரில் பாமக போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அதையடுத்து, அமைதிவழி போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, தமிழக அரசு,  மாநிலத்தில்  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான விவரங்களை சேகரிக்க, நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.  அதனப்டி, குலசேகரன் ஆணையம்,  அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியது,.

இந்த நிலையில், எடப்பாடி  அரசின் கடைசி சட்டமன்ற தொடரின் கடைசி நாளன்று (பிப்ரவரி 26ந்தேதி),  வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.  அதன்படி,   மிகவும் பிற்பட்டோர் வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதரமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 2.5 சதவீதம் வழங்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்ன்ர இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்பேரில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிவிப்பை தமிழகஅரசு  பிப்ரவரி 26-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட மசோதா இந்த தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுமையாக முடிக்காமல் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்க்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.