சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு – அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு வழங்கியுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டத்தை செய்து உள்ளது  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு அதிரடியாக  தீர்ப்பு வழங்கி உள்ளது.

வன்னிய சமூதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடந்த அதிமுக ஆட்சியில்  வன்னியர் பிரினருக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப் பட்டது. தனப்டி,  20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் இனத்தின ருக்காக 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கி பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப் பட்டது. பின்னர், இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கு மற்ற சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மற்ற சமூகதாயங்களைச் சேர்ந்த 60 நபர்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று பரபரப்பை தீர்ப்பு வழங்கியது.

இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும், சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என 6 கேள்விகளை எழுப்பினோம். ஆனால், அதற்கு தமிழகஅரசு அளித்த விளக்கம் சரியல்ல என்று கூறிய நீதிபதிகள்,  முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து,  இந்த தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற பாமக சார்பில் நீதிபதிகளிட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவரம்

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்காக 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு வன்னியர்களுக்கு 7% மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது. 25 எம்.பி.சி மற்றும் 68 சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடும், மீதம் உள்ள 22 எம்.பி.சி பிரிவினருக்கு 2.5% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு பிறகு 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்கள் பிரிவில் வரும் 7 உட்பிரினருக்கு, (வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், படையாச்சி , பள்ளி, அக்னிகுல சத்திரியர்கள்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.