சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு ஆகிய இரு பகுதிகளில் மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதலில் வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில் ஒரு பகுதியை போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து கோயம்பேடு வந்தவர், அங்கு கட்டப்பட்டிருந்த கோயம்பேடு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

கோயம்பேடு புதிய பாலத்தால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த  நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எ.வ. வேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, ஹசன்மவுலானா மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.