4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்

Must read

சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று கூறினார்.

இது எனது அடுத்த திருமணமா என்று சமுக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம்”. நடிகர்கள் அடுத்தடுத்து திருமணம் செய்யும் போது பத்திரிகைகளில் எழுதப்படுவதில்லை. நான் அதை செய்யும் போது பலரும் எழுதுகின்றனர் என்று கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுகையில், “லத்திகா படம் ஓடியதை போல… ஓடியதா? ஓட வைத்தோமா என உங்களுக்கே தெரியும். இந்த படமும் ஓடும்… ஓட வைப்போம். நல்ல கருத்தான காமெடியான படம். படத்தின் ப்ரோமோசனுக்காக எடுத்த போட்டோ இந்தளவிற்கு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. ரீலுக்கா எடுத்த போட்டோ ரியலாகுமா என்பது கடவுள் கையிலேயே உள்ளது என்றார்.

மேலும், நடிகை வனிதா அடுத்தடுத்து திருமணம் செய்வது பற்றிய கேள்விக்கு, ஒரு பெண் தனியாக இருக்க முடியாது. பாதுகாப்பிற்காக ஆண் தேவை என்றதோடு, வெளிப்படையாக திருமணத்தை தெரிவிக்கு நடிகை வனிதா ஒரு இரும்பு மனிதி என்று பட்டமும் அளித்தார்.

 

More articles

Latest article