பிக்பாஸ் நிகழ்ச்சியோட 13ம் நாளான நேத்திக்கு நாம சொன்ன மாதிரியே அதிக வாக்குகள் வித்தியாசத்துல காப்பற்றப்பட்டாங்க மதுமிதா. நிகழ்ச்சி தொடங்கிய உடனே, இதுவரை பார்க்காத 12ம் நாளோட தொடர்ச்சியை பார்ப்போம்னு கமல்ஹாசன் சொல்ல, 12ம் நாளோட தொடர்ச்சி ஓடுச்சுன்னு தான் சொல்லனும். நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால் நடிப்புல வெளியான ஜில்லா படத்துல இருந்து எப்ப மாமா மாமா ட்ரீட்டுங்குற பாடல் ஒலிக்கப்பட, எல்லா போட்டியாளருமே ஆடினாங்கன்னு தான் சொல்லனும். அதுலயும் சாண்டி மாஸ்டர் குத்து டான்ஸ் சொல்லி குடுக்க, அப்படியே மற்ற போட்டியாளரும் ஆடினாங்கன்னு தான் சொல்லனும்.

அப்ப தான் பிக்பாஸ் கிட்ட இருந்து ஒரு லெட்டர் வந்துச்சு. அதுல அபிராமி நவரசங்களை நடிச்சு காட்டனும்னு சொல்ல, முதல்ல அதை செஞ்சது பாத்திமா பாபுவும், சாண்டி மாஸ்டரும் தான். அதுக்கப்புறம் மதுமிதா – கேப்டன் மோகன் வைத்யா அந்த டாஸ்க்கை செஞ்சு முடிக்க, எல்லாருமே ரசிச்சு சிரிச்சாங்கன்னு தான் சொல்லனும்.

இது ஒருபக்கம் இருக்க, வனிதா அவங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்கன்னு தான் சொல்லனும். மீரா கிட்ட, மதுமிதாவை பத்தியும், பாத்திமா பாபு பத்தியும் தப்பா சொல்ல, அதுக்கு மீரா ரியாக்ட் பண்ணி, பாத்திமா பாபு கூட சண்டை போட போனது, கேட்பாற் பேச்சை கேட்டு நடக்குற மாதிரி தோணுச்சுன்னு தான் சொல்லனும். இதை எல்லாம் கேட்டுட்டே தூங்கின வனிதா, சிரிச்ச விதம், தன்னோட வேலை சரியா வேலை செய்யுதுன்னு அவங்க மனசுல நினைச்சதை ரொம்ப வெளிப்படையாவே காட்டுச்சுன்னு தான் சொல்லனும்.

அதுக்கப்புறம் வீட்ல இருக்குறவங்களை சந்திச்சு பேசின கமல், வீட்ல நடக்குற சண்டையை பற்றி கேட்டப்போ, சரவணன் இதை யாரலயுமே தீர்க்க முடியாதுன்னு சொன்னது அவருடைய எதார்த்தத்தை காட்டுச்சுன்னு தான் சொல்லனும். அதுக்கப்புறம் ஒரு சின்ன விளையாட்டும் விளையாடினாங்கன்னு தான் சொல்லனும். அப்ப ஒருத்தரை பற்றி நல்ல விதமாவும் சொல்லனும், கெட்ட விதமாவும் சொல்லனும்னு சொல்ல, அதை ரொம்பவே சரியா செஞ்சது சேரன் மட்டும் தான்னு சொல்லலாம்.

இதுக்கப்புறம் தான் யார் எலிமினேட் ஆகப்போறாங்கன்னு சொல்லி போட்டியாளர்கள் நினைக்குறாங்கன்னு ஒரு கேள்வியை கமல் கேட்டார். கிட்டத்தட்ட 9 பேர் மதுமிதாவுக்கும், 5 பேர் மீராவுக்கும் வாக்களிக்க, சரவணனும், பாத்திமா பாபுவும் தனக்கு தானே வாக்களிச்சாங்கன்னு தான் சொல்லனும். இதுல சுவாரஸ்யம் என்னன்னா, நேற்று வரை சண்டை போட்டுட்டு இருந்த அபிராமி, இன்னிக்கு மதுமிதாவை நல்ல விதமா சொல்லுறதும், மீரா மேல எரிஞ்சு விழுறதும் பார்க்கவே புதுமையா இருந்துச்சுன்னு தான் சொல்லனும். அதை எல்லாம் பார்த்த கமல், உங்க தீர்ப்பு இப்படி, மக்கள் யாரை காப்பாற்றியிருக்கிறார்கள் அப்டின்னு சொல்லி, கவுண்ட் டவுன் எல்லாம் குடுத்து, எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே அதிக வாக்குகளை வாங்கிய மீரா பெயரை சொன்னார். இதை கேட்ட உடனேயே, ஜஸ்ட் பாஸ் ஆகுற கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட், 60 மார்க் வாங்கும்போது எவ்வளவு உணர்ச்சிகளை கொட்டுவானோ, அது மாதிரி அழுதுட்டாங்க மதுமிதா. ஒருவேளை மதுமிதா அழாமல் இருந்திருந்தா, அது அவங்களுடைய மனநிலையை வேறு மாதிரியா ஆக்கியிருக்கும்னு கூட சொல்லலாம். தனக்குள்ள இருந்த ஸ்ட்ரெஸ்ஸை எல்லாம் அழுது வெளிய கொட்டினது, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துச்சுன்னு தான் சொல்லனும்.

இதை எதிர்பார்க்காத வனிதா, கமல் பேசி முடிச்சதுக்கு அப்புறம் மீரா கிட்ட போய், உனக்காக தான் நாங்க மதுமிதாவோட சண்டை போட்டோம். இப்ப நீயே டபுள் ஸ்டான்ட் எடுக்குறன்னு சொல்ல, எனக்கு என்ன தோணுதோ அதை செய்யுறேன்னு மீரா சொல்லிட்டு போய்ட்டாங்கன்னு தான் சொல்லனும்.

அப்ப சரவணன், சாண்டி கூட பேசிட்டிருந்த கவின், தான் பண்ணினது தப்புன்னு உணர்ந்தார். ஆனா அது சரின்னு குறுக்கிட்ட வனிதா, கவினுக்கு எதிரா பார்வையாளர்கள் கொண்ட மனநிலையை, அவருக்கு ஆதரவான மனநிலைன்னு தவறா பாடம் புகட்ட, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்கன்னு சரவணன் எழுந்தே போயிட்டாருங்க. இதை ஒருவேளை கவின் ஏத்துக்கிட்டா, சுயமா யோசிக்கும் தன்மை கூட அவருக்கு இல்லை அப்டின்னு சொல்லுற விதமா தான் அது இருக்கும்னு சொல்லலாம்.

இன்னிக்கு எலிமினேட் ஆகப்போறது யார் ? அப்படிங்குற கேள்வி ரொம்பவே அதிகமா எழுப்பப்படும் நிலையில, சாக்ஷி தன் பெயர் வருமோன்னு காட்டும் அந்த பய உணர்வு, ரொம்ப தெளிவா அதை பார்க்க முடியுதுன்னு தான் சொல்லனும். ஆனா இன்னிக்கு வெளியேறப்போவது பாத்திமா பாபு அப்படின்னு தான் தகவல் வெளியாகியிருக்குன்னு சொல்லனும். வீட்டுக்குள்ள முதல்ல போன நபரும் அவங்க தான், இப்ப வெளிய வரப்போற முதல் நபரும் அவங்களா தான் இருப்பாங்கன்னு தெரியுது. என்ன நடக்குதுன்னு பொருத்திருந்து பார்க்கலாம்.

வீடியோ: [embedyt] https://www.youtube.com/watch?v=b9if7naS1rM[/embedyt]