சரவண பவன் உரிமையாளருக்கு சரணடைய கெடு இன்றுடன் முடிவு

Must read

சென்னை

கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளருகு சரண் அடைய விதிக்கபட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது

தமிழகத்தின் புகழ்பெற்ற உணவு விடுதிகளில் ஒன்றான ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்.   இவருடைய உணவக மேலாளரின் மகள் ஜீவஜோதி. ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரும் அதே உணவகத்தில் பணி புரிந்து வந்தார். திடீரென பிரின்ஸ் சாந்தகுமார் கானாமல் போனார். அவர் இருக்குமிடம் யாஅருக்கும் தெரியவில்லை.

ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்ய விரும்பியதாகவும் அதனால் ஜீவஜோதியின் கணவரை அவர் கடத்தி கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு கொடைக்கானலில் பிரின்ஸ் செல்வகுமாரின் உடல் கிடைத்தது. இந்த வழக்கில் சரவண வன் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டல்தால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அரசு சார்பில் அவருடைய 10 ஆண்டு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற ஒரு மனு அளிக்கபட்டது.

மனுவை ஏற்ற நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உச்சநீதிமன்ற்த்தில் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டு அவருக்கு சரண் அடைய ஜுலை 7 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கபட்டுள்ளது. இன்றுடன் அந்த கெடு முடிவதால் நாளை அவர் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article