நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார்.

பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

அனல் காற்று என்ற படத்தில் நடித்து வரும் வனிதா, ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் நடிக்கிறார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்கிறார். அண்மையில் சிவப்பு மனிதர்கள் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்தார் வனிதா.

இதேபோல் கொடூரன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறிய வனிதா, அந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மணி நாகராஜ் இயக்கம் இந்த படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான டாக்டர் கேரக்டரில் நீயா நானா புகழ் கோபிநாத் நடிக்கிறார்

இந்த படத்தில் 4 முக்கிய கதாப்பாத்திரங்களில், அனிகா சுரேந்திரன், சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நான்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை