சென்னை

சென்னை மற்றும் நாகர்கோவில்  இடையே  வந்தே பாரத் சிறப்பு ரயில் இன்றும் நாளையும்  இயக்கப்பட உள்ளது.

அண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு பொங்கலையொட்டி கூடுதலாகச் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை, (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி. எண்-06081) மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (06082) இரவு 11.35 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.