நாக்பூர்:
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியாவில், 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வந்த சூழலில், 6 வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிளாஸ்பூர் இடையே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்தார். இதனையடுத்து இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மிகான் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி சம்ருத்தி நெடுஞ்சாலை திட்டத்தின் முதல் கட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.