நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது.

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சண்டைக்காட்சிகளுடன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹைதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.

காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். ‘வலிமை’ அடுத்த ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.