தூத்துக்குடி,

ட்டவிரோதமாக தாது மணல் கடத்தியதாக வைகுண்டராஜனின் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் இருந்து தாதுமணல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது வி.வி.மினரல்ஸ்.

இந்நிறுவனத்தின் தலைவராக தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த வைகுண்டராஜன் இருக்கிறார்.

ஏற்கனவே, வைகுண்டராஜனின் விவி மினரல் நிறுவனம், அளவுக்கு அதிகமாக தாது மணல் அள்ளுவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாகவும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்,மாவட்ட ஆட்சியரின் பெயரிலேயே போலி ஆவனம் தயார் செய்யப்பட்டு, அதன் வாயி லாக  420 டன் தாது மணலை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விவி மினரல் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில்,  மாவட்ட ஆட்சியர் விவி. மினரல்ஸ் குடோன்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஏற்றுமதிக்கு தயாரான நிலையில் 14குடோன்களில் இருந்த 25000 மெட்ரிக் டன் எடை கொண்ட தாதுமணல் உள்ள குடோன்கள் அனைத்தும்  பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்  டி.டி.வி.தினகரனுக்கு வைகுண்டராஜன் ஆதரவு கொடுத்த அதே நாளில்தான்,  போலி ஆவண மோசடி குறித்து தகவலை துறைமுக அதிகாரிகள் அம்பலப்படுத்தினர்.

தற்போது, அதிமுகவின் சின்னமா  இரட்டை இலை முடக்கிவிட்ட சூழலில், வி.வி.மின ரல்ஸ் நிறுவனத்துக்காக  பரிந்துரைக்கப்ப பட்ட அனைத்து ஆவணங்களையும்  மத்திய அரசின் சுங்கத்துறை அலசத் தொடங்கி யிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.