தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் 

Must read

சென்னை: 
மிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாலைவனச் சோலையில் தொடங்கிப் பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர் சந்திரசேகர். திமுகவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.
திமுகவிலிருந்து எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சரத்குமார் எனப் பல நடிகர்கள் வெளியேறிய போதெல்லாம் சந்திரசேகர் மட்டும் வெளியேறாமல் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து வருகிறார்.
இவருக்கு திமுக 1999ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை  நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article