தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3

Must read

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3

 – சங்கர் வேணுகோபால்

Covid தொற்று மேலாண்மையில் இந்திய ஒன்றிய அரசு பெருந்தோல்வி அடைய முக்கிய காரணம் ஒருங்கிணைந்த தொலைநோக்கு பார்வையும் அறிவியல் ஆலோசனையும் இல்லாமல் போனதே.

மேலும் 138 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லாத ஆட்சியரும் எந்த ஒரு தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் உலக அரங்கில் தன்னை வெற்று விளம்பரம் மூலம் மட்டுமே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள துடிக்கும் பேராசையின் காரணமாக, குறைந்த அளவே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை வீணாக அன்பளிப்பும் வியாபாரமும் செய்த செயலே நாம் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து மீளாமல் போனதற்கு காரணம்.

Serum நிறுவனமும் Bharat Biotech நிறுவனமும் மொத்தம் உற்பத்தி செய்த தடுப்பூசிகள் எவ்வளவு என்று வெளிப்படையாக தரவுகள் இல்லாத இந்த நிலையில் நாம் பொது வெளியில் இருக்கும் தரவுகளின் அடிப்படையிலும் அரசாங்கம் வெளியிட்ட சில தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தெரியவந்திருக்கும் சில இமாலய தவறுகளை இப்போது பார்ப்போம்.

GAVI+CEPI+WHO+AZ+Gates  Foundation கூட்டாக எந்த நிறுவனங்கள் எவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டும் அவை எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு விநியோகிக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை செய்தது அதனடிப்படையில் நாடுகள் சில பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன.

இந்த நாடுகள் முறையே Low Income Countries மற்றும் Lower-Middle Income Countries எனவும் High Income Countries எனவும் வகைப்படுத்தப்பட்டது.

இந்த பிரிவில் இருக்கும் நாடுகளின் தொற்று வீரியத்தின் நிலைமை கருத்தில் கொண்டு GAVI இந்த நாடுகளுக்கு தடுப்பூசி தேவையை நெறிமுறைப்படுத்தியது

மேலும் பணக்கார நாடுகளின் தேவையை ஒருமுகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட சில நிறுவனங்களுக்கு உற்பத்தி ஒப்பந்தங்களாக வழங்கியது.

இந்த ஒப்பந்தம் AMC- Advance Marketing Commitment என்று சொல்லப்படும் உறுதிமொழியை ஏற்படுத்தியது.

இந்த முறையின் மூலம் பணக்கார நாடுகள் SFP – Self Financing Program என்று சொல்லப்படும் சுய முதலீட்டு முறையில் பெற்றுக்கொள்ளும்.

மற்ற நாடுகளுக்கு GAVI அந்தந்த நாடுகளின் தடுப்பூசி கொள்முதலுக்கு தேவையான பணத்தை அந்த நாடுகளின் பங்கு போக மிச்ச பணத்தை Global South Initiative மற்றும் Global North Initiative மூலம் செலுத்தும் என்றும் முடிவானது இதுவே COVAX பங்கீடு என்று அழைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் GAVI + WHO + Gates Foundation சேர்ந்து Serum நிறுவனத்திற்கு சில உற்பத்தி ஒப்பந்தங்களை வழங்கியது. அந்த நாடுகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

COVAX மூலம் இந்த நாடுகளுக்கு 2021 Feb முதல் June மாதம் இறுதிக்குள் Serum வழங்கியிருக்க வேண்டிய தடுப்பூசி  111,240,000*1 அதாவது 11 கோடியே 12 இலட்சத்தி 40 ஆயிரம் தடுப்பூசிகள்.

ஆனால் GAVI மற்றும் AZ வைக்கும் குற்றச்சாட்டு Serum ஒப்பந்த விதியின்படி தடுப்பூசிகள் வழங்கவில்லை என்று.

மாறாக Serum COVAX மூலம் வழங்கிய தடுப்பூசிகள் 18,200,000 *2 மட்டுமே அதாவது 1கோடியே 82 லட்சம் தடுப்பூசிகளே.

 

ஒப்பந்த அளவை காட்டிலும் 84% குறைவாக Serum இந்த நாடுகளுக்கு வழங்கியது.  இதன் மூலம் அந்த நாடுகளின் தடுப்பூசி திட்ட மேலாண்மையை சீர்குலைய வைத்துள்ளது.

சில விமசகர்கள் நம் நாட்டு தேவை கருதி அந்த தடுப்பூசி ஒதுக்கீட்டை மோடி Serum நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார் என்று பேசுவதும் எவ்வளவு போலியானது என்று பார்ப்போம்.

இங்கே குறிப்பிட்டுள்ள நாடுகள் AZ மூலம் தங்கள் தேவைக்கான தடுப்பூசியை தங்கள் பணத்தின் மூலம் வாங்கிக்கொள்ள முடிவு செய்த நிலையில் இந்த உற்பத்தி Serum நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மேலே உள்ள பல நாடுகளுக்கு Serum நிறுவனமோ அல்லது இந்திய ஒன்றிய அரசு அன்பளிப்பாகவும்  வர்த்தக ரீதியாகவும் விற்பனை செய்வது என்பது தேச துரோக செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இந்த நாடுகள் Serum நிறுவனத்திடம் AMC மூலமாகவோ SFP மூலமாகவோ எந்தவித கொள்முதல் ஒப்பந்தமோ தரவில்லை மாறாக இந்த நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி வேறு ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஒப்பந்தமே இல்லாத நாடுகளுக்கு இந்திய ஒன்றிய அரசு அன்பளிப்பாக வோ லாபத்திற்காகவோ மொத்தம் 13,640,000 தடுப்பூசிகளை பரிவர்த்தனை செய்ததே நம் உள்நாட்டு தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட காரணம்.

அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு என்னவென்றால் இந்த 1 கோடியே 36 லட்சத்தி 40 ஆயிரம் தடுப்பூசிகளில் பெயரளவிற்கு 1,195,000 ( 11 லட்சத்தி 95 ஆயிரம் ) தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

மீதம் 12,445,000 (1 கோடியே 24 லட்சத்தி 45 ஆயிரம் ) தடுப்பூசிகள் வர்த்தக ரீதியாக லாபத்திற்கு விற்கப்பட்டது. 

இந்த பெருந்தொற்று காலத்தில் வர்த்தக ரீதியாக ஒரு நிறுவனம் செயல்படும் போது அதை முறைப்படுத்த வேண்டிய அரசாங்கம் அந்த வர்த்தக வியாபாரத்தை விமர்சையாக கொண்டாடுவது மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே உறுதி  செய்கிறது.

ஒப்பந்தத்தை மீறி Serum நிறுவனம் வியாபாரம் செய்யும் போது GAVI கூட்டமைப்பில்அங்கம் வகிக்கும் இந்திய ஒன்றிய அரசு அந்த விதிமீறலை தண்டித்திருக்க வேண்டாமா ?

ஏன் இந்த அநீதியை மறைத்து மாறாக தடுப்பூசி சாதுரியம் என்ற பெயரில் ஒன்றிய அரசு விளம்பரமாக திசை மாற்றியது?

நம் நாட்டு மக்கள் தடுப்பூசி இன்றி தவிக்க, கொள்ளை லாபம் வியாபாரம் செய்யும் ஒருவனை தண்டிக்காமல் வெளிநாடு சென்று தங்க அனுமதியளித்தது யார் என்ற கேள்விக்கு மோடி விடையளிப்பாரா?

இது தவிர GAVIயின் COVAX-AMC ஒப்பந்தம் மூலம் Serum வழங்கவேண்டிய தடுப்பூசி எண்ணிக்கை 11 கோடியே 12 இலட்சத்தி 40 ஆயிரம் என்று பார்த்தோம் . இதில் Serum ஒப்பந்த விதிப்படி வழங்கிய தடுப்பூசி 18,200,000 *2 மட்டுமே என்பதையும் பார்த்தோம்

ஆனால் இங்கே கேலிக்கூத்து என்னவென்றால் AMC மூலம் வழங்க வேண்டிய தொகுப்பினை ஒப்பந்தப்படி வழங்காமல் அதே சமயம் அதே நாடுகளுக்கு AMC வெளியே அன்பளிப்பு மற்றும் வியாபாரம் பொருட்டு பரிவர்த்தனை செய்தது  46,507,000 ( 4 கோடியே 65 லட்சத்தி 7 ஆயிரம் தடுப்பூசிகள்)

இந்த தொகுப்பிலும்  10,715,000 அன்பளிப்பாக வழங்கிவிட்டு  35,792,000 தடுப்பூசியை கொள்ளை லாபம் பொருட்டு வர்த்த ரீதியாக வியாபாரம் செய்தது Serum நிறுவனமா? அல்லது ஒன்றிய அரசா? இந்த கேள்விக்கு விடையளிப்பாரா மோடி ?

 மோடியிடம் சில கேள்விகள்

1) அன்பளிப்பாக வழங்கப்பட்ட மொத்தம் 11,910,000 தடுப்பூசிகளை Serum நிறுவனத்திடம் இருந்து வாங்கியது யார்?  அதற்கு எவ்வளவு பணம் தாரை வார்க்கப்பட்டது?

2) இந்த தொகுப்பு எந்த பணத்தில் இருந்து வாங்கப்பட்டது ? நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய 35,000 கோடியில் இருந்தா? அல்லது PMCARES நிதியில் இருந்தா?

3) ஏற்கனவே AMC தொகுப்பிற்கு GAVI மூலம் பணம் பெற்றுக்கொண்ட Serum ஒன்றிய அரசிடம் இருந்தும் அன்பளிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டதா? அப்படி என்றால் அது ஒரே விற்பனைக்கு இரண்டு முறை பணம் வரவு வைத்தது ஆகாதா?

4) GAVIயில் அங்கம் வகிக்கும் ஒரு பொறுப்பான நாடு இப்படி தடுப்பூசி தொகுப்பினை மடை மாற்றி வியாபாரம் செய்யலாமா?

5) இவ்வளவு முறைகேடு நிகழ்ந்த பிறகும் அந்த நிறுவனத்திற்கு எப்படி 3000 கோடி முதல் வழங்கப்பட்டது? முறைகேடுகள் செய்த ஒருவர் எப்படி வெளிநாடு சென்றார் ?

6) Mehul Choksi, Nirav Modi வரிசையில் ஒரு ஆசீர்வாதத்துடன் வழி அனுப்பி வைத்தது யார்?

7) இந்த இரட்டை விற்பனை பணம் எங்கு போனது? யார் பதுக்கி வைத்திருப்பது? இதை நாடாளுமன்றத்திலோ பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ சொல்லாமல் மூடி மறைக்க என்ன காரணம்?

தொடர்புடைய செய்தி :

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 1

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

*1) https://www.gavi.org/sites/default/files/covid/covax/3rd-round-allocation-Pfizer-Apr-Jun-2021.pdf

*2) https://science.thewire.in/health/amidst-india-surge-serum-institute-legally-bound-to-supply-vaccines-to-covax/

Write-up, Data Research & Fact checking  By: Shankar Venugopal

 

More articles

Latest article