தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி – சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

Must read

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

– சங்கர் வேணுகோபால்

கடந்த 2 வருடங்களாக Sarscovid-19 அனைத்து நாடுகளையும் தாக்கிய நிலையில் இன்று தடுப்பூசி ஒன்றே நம்மை நோயிலிருந்து காப்பாற்றும் என்று அனைத்து நாடுகளும் தடுப்பூசி வாங்குவதிலும் அதை திறம்பட மக்களுக்கு செலுத்துவதிலும் தங்கள் கவனத்தை செலுத்துகிறது.

ஆனால் இந்தியாவின் நிலைமையோ அவலமாக இருக்கிறது.

உலகத்தின் தடுப்பூசி தேவைகளில் 60% ஏற்றுமதி செய்யும் இந்தியா தடுப்பூசி இல்லாமல் தடுமாறுவது ஏன் ?

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 35000 கோடி நிதி ஓதிக்கியத்தில் எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கப்பட்டது ?

Serum நிறுவனத்திடம் மற்றும் Bharat Biotech  நிறுவனத்திடம் எவ்வளவு தடுப்பூசி கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டது?

2020 November மாதம் 5  கோடி*1  தடுப்பூசி உற்பத்தி செய்திருந்த Serum மாதம் 5 கோடி *2  உற்பத்தி திறன் புடைத்திருந்த நிலையில் December முதல் April வரை குறைந்தபட்சம்  30 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்திருக்கக்கூடும்.

ஆனால் Serum வழங்கவேண்டிய GAVI AMC பங்கீடு 10 கோடி ஒப்பந்தப்படி வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் அந்த 30 கோடி தடுப்பூசி இந்திய மக்கள் பயன்பாட்டிற்கும் கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் அந்த தடுப்பூசிகள் எங்கே பதுக்கப்பட்டது ?

நாங்கள் வழங்கிய ஒப்பந்தப்படி Serum தடுப்பூசிகளை வழங்கவில்லை என்று AZ மற்றும் GAVI வழக்கு தொடர என்ன காரணம் ?

இந்திய மக்களின் உயிரை பணயம் வைத்து தடுப்பூசிகள் பதுக்கப்பட்டனவா? பெரும் லாபம் பார்க்கும் பொருட்டு தனியார் நிறுவனமான Serum வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்ததா? இந்த ஏற்றுமதியை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்ததா? அல்லது ஒன்றிய அரசே வணிக நோக்கில் வியாபாரம் செய்ததா?

இந்த கேள்விகளின் விடை நோக்கி போகும் பயணத்தில் முதலாவதாக நாம் சில தெரிந்துக்கொள்வோம் :

WHO World Health Organization

GAVI Global Alliance for Vaccines & Immunizations

CEPI Coalition for Epidemic Preparedness & Innovation

AZ Astra Zeneca

Jenner Institute

AMC Advance Market Commitment

SFP Self Funded Program / Self Financed Purchase

Gates Foundation

WPRO Western Pacific Region Office

PAHO Pan American Health Organization

EMRO Eastern Mediterranean Office

AFRO African countries Regional Office

EURO European Regional Office

SEARO South East Asian countries Regional Office

LMIC Low & Middle Income Countries

SII Serum Institute India

SK Bio South Korea Biosciences

கொரோனா உலகை புரட்டிப்போட்ட நிலையில் அதற்கு எத்தகைய மருத்துவம் என்று நாடுகள் திணறிய நிலையில் மிக சில தடுப்பூசிகளே ஆராய்ச்சி மூலம் வெளிவந்தது.

இந்த தடுப்பூசிகளை வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகள் கபளீகரம் செய்து ஏழை நாடுகள் மருந்து இல்லாமல் அவதி படக்கூடாது என்ற எண்ணத்தில் GAVI தனது Global South திட்டத்தின் மூலம் தன் செலவில் மூதலீடு செய்து விநியோகம் செய்ய முன் வந்ததது.

இதன் தொடர்ச்சியாய் Oxford கண்டுபிடித்த தடுப்பூசியை Serum நிறுவனத்துக்கு இலவசமாக தர முன்வந்தது அதற்கு பதில் 92 ஏழை நாடுகளுக்கு முதல் கட்டமாக 10 கோடி தடுப்பூசியும் 2021 ஆண்டு இறுதிக்குள் சற்றேரகுறைய 100 கோடி*3  தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு COVAX-AMC ஒப்பந்தப்படி உற்பத்தி செய்து தர வேண்டும் என்றும் அதற்கு நிகரான பணத்தை GAVI முன்கூட்டியே வழங்கியது.

அந்த வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.

இந்த ஒப்பந்தத்தின் படி Serum இந்திய நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றும் மேலும் GAVI பங்கீட்டில் 20% தடுப்பூசிகளை விலையில்லாமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒப்புதல் வழங்கியது.

இப்படிப்பட்ட சூழலில் நமக்கு எப்படி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்தியாவிலும் தட்டுப்பாடு; GAVI ஒப்பந்தப்படியும் போதுமான தடுப்பூசிகள் போய்ச்சேரவில்லை என்றால் Serum உற்பத்தி செய்த தடுப்பூசிகள் எங்கே போனது ?

Bharat Biotech இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு தடுப்பூசிகள் உற்பத்தி செய்தது ? அதில் எவ்வளவு ஒன்றிய அரசு வாங்கியது ? அந்த தடுப்பூசிகள் எங்கே?

PMCares நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டனவா ? அப்படி என்றால் அவை எங்கே?

இவ்வளவு தடுப்பூசிகள் நம்மிடம் இருந்திருக்க வேண்டிய நிலையில் ஏன் 3. 5% மக்கள் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகள் பெற்று இருக்கிறார்கள் ?

ஏன் மாநிலங்கள் யாவும் எவ்வளவு தடுப்பூசி நாளை கிடைக்கும் என்று தெரியாமல் தவிக்கும் நிலை.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய ஆயிரக்கணக்கானோர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்த இயலாமல் உயிர் அபாயம் கண்டு அஞ்சியிருக்கும் அவல நிலை?

தடுப்பூசி தட்டுப்பாடு வர யார் காரணம்?

இங்கே தடுப்பூசி ராஜதந்திரம் அல்லது தடுப்பூசி சாமர்த்தியம் என்ற பெயரில் இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதா ?.

மோடியின் விளம்பர ஆசைக்கு நம் மக்களின் உயிர் பணயம் வைக்கப்பட்டது அனைத்திற்கும் மேலாக தடுப்பூசி கொள்ளை லாப விலையில் தென்னாப்பிரிக்கா*4  மற்றும் சில தீவு நாடுகளுக்கு விற்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மோடி ஏன் நம் நாட்டு வளங்களை அந்நிய நாடுகளுக்கு இலவசமாகவும் லாபம் ஈட்டும் பொருட்டு வர்த்தகம் செய்தாரா?  என்பது இங்கு சத்தமாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.

கொரோனா பெருந்தொற்றுநோய் மேலாண்மையில் பல வகையிலும் தவறுகள் இழைத்த ஒன்றிய அரசு இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் தட்டிக்கழிப்பதுடன் மக்களை திசை திருப்பவதிலும் மும்முரமாக இருக்கிறது .

Diabolical என்று சொல்லப்படும் மிகவும் மோசமான சதி திட்டம் என்று சந்தேகிக்கும் நிலை குறித்து தெரிந்து கொள்வோம்.

தொடர்புடைய செய்தி : தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 1 

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

*1) https://www.livemint.com/science/news/covid-19-vaccine-serum-institute-plans-to-make-10-crore-doses-each-month-from-next-year-11607678843712.html

*2) https://www.businesstoday.in/coronavirus/after-launching-how-much-vaccine-can-india-make-and-the-catch/story/436474.html

*3) https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/astrazenecas-deals-produce-supply-its-covid-19-vaccine-2021-05-26/

*4) https://www.downtoearth.org.in/news/africa/covid-19-in-africa-the-pain-of-getting-the-jab-76871

Write-up, Data Research & Fact checking  By: Shankar Venugopal

 

More articles

Latest article