சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அவை உனே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
பல மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு 85 ஆயிரம் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. அதுபோல 14,220 டோஸ்கள் கோவிஷீல்டு இந்த தடுப்பூசிகள் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன…