சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில், தமிழகஅரசு + மாநகராட்சி மேற்கொண்  துரித நடவடிக்கை காரணமாக, தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால்  சென்னையில் 7,500 படுக்கைகள் காலியாக இருப்பதாக  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 2வது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்ததுடன், ஆக்சிஜன், கொரோனா மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தடுக்க தமிழகஅரசு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்ததுடன், தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக  தொற்று சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 7,500 படுக்கைகள் காலியாக உள்ளன.

சென்னையில்  கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டன. இதையடுத்து, தமிழகஅரசு,  ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை அரசு திறந்தது. இதனால், கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் படுக்கைகள் கிடைத்தது. இந்த நிலையில், தற்போது   சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 7,500 படுக்கைகள் காலியாக உள்ளது.

தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் தமிழகஅரசு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை போலிஸார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‘