பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

Must read

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல் 24 வரை  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதையொட்டி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன்,  ஆட்டோ, டாக்சி ஓடவும் தடை போடப்பட்டுள்ளது. ஆனால் சிறுகடைகள் மதியம் 12மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி தொடரும், என்றும், பொதுமக்கள் தடுப்பூசிகளை அதற்கான மையங்களுக்கு சென்று செலுத்திக்கொள்ளலாம் என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article