ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

Must read

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மருத்துவர்களின் கொரோனா தடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரம் கேட்டறிந்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று காலை  சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்குஙள்ள கொரோனா சிகிச்சை வார்டு சென்றவர், அங்குள்ள வசதிகள்,சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தவர்.,  ஆக்சிஜன் படுக்கைகள் கையிருப்பு பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் சென்னையை நோக்கி வருகின்றனர். இதனால், சென்னை நந்தம்பாக்கத்தில் 360 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதி குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

More articles

Latest article