100கோடி பேருக்கு தடுப்பூசி: காலை 10 மணிக்‍கு நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

Must read

டெல்லி: இந்தியாவில் 100கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்‍கு பிரதமர் மோடி நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மக்களுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. அதன்படி மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியாவில்  100 கோடிக்கும் மேலான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சீனா இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவும் கடந்த 9 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சாதனைக்‍கு உழைத்த சுகாதாரத்துறையினர் அனைவருக்‍கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளதாகவும், இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே இந்த சாதனைக்கு காரணம் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

More articles

Latest article