மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்துத்த படம் ‘வானம் கொட்டட்டும்’.

தனா இயக்கிய இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன் சேர்ந்து எழுதியிருந்தார். பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விவேக் பாடல்கள் எழுதியுள்ளார் .

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்திலிருந்து என் உயிர் காற்றே பாடல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை சிவா ஆனந்த் எழுதியுள்ளார்.