உலக மல்யுத்த கூட்டமைப்பில் (UWW) இருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் உலக மல்யுத்த கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு WFI-க்கு பெரும் அடியாக விழுந்திருக்கிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்த ஜூலை 15 ம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி UWW இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

WFI தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் பதவிக்காலம் முடிவதைந்த நிலையில் தேர்தல் நடத்தாமல் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சங்க தேர்தலை நடத்த 45 நாட்கள் அவகாசம் வழங்கி உலக மல்யுத்த கூட்டமைப்பு மே 30 ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அசாம் மற்றும் ஹரியானா மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக WFI தேர்தலை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து செப்டம்பர் 16 ம் தேதி துவங்கவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் UWW கொடியுடன் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.