பாகு

ன்று நடந்த உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.

அஜர்பைஜன் தலைநர்க் பாகுவில் ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனும் (நார்வே) மோதினர்,.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.  இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று நடந்தது.  ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைப்புள்ளி வழங்கப்பட்டது.

இன்று வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது..இந்த டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற பிரக்ஞானந்தா இறுதி வரை போராடியும் வெற்றி பெற முடியாமல் போனது. இதனால், கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.  இதில் 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது.  ஆயினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்ததனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.

2-வது சுற்றுப் போட்டியில் கருப்பு காய்களுடன் போட்டியை ஆட தொடங்கிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது.  கார்ல்சன் 2-வது சுற்று ஆட்டத்திலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். கார்ல்சன் அதிரடியாகக் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றார்.

உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.