அக்டோபர் மாதம் 5 ம் தேதி முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் துவங்க உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிசிசிஐ செப்டம்பர் 29 முதல் நடைபெற உள்ள பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளையும் விற்பனை செய்ய உள்ளது.

புக் மை ஷோ (BookMyShow) இணையத்தளத்தை தனது அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை முகவராக நியமித்துள்ள பிசிசிஐ போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஐசிசி அனுமதியுடன் மாஸ்டர் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேக டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ள பிசிசிஐ அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டுகளை விற்க ஏற்பாடு செய்துள்ளது.

மாஸ்டர்கார்டு பயனர்களுக்கான உலகக் கோப்பை 2023 டிக்கெட் அட்டவணை:

மாஸ்டர்கார்டு முன் விற்பனை :

பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து இந்திய அணி அல்லாத அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் – ஆகஸ்ட் 24 இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல்

பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து இந்திய அணியின் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் – ஆகஸ்ட் 29 இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல்

அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட் – செப்டம்பர் 14 இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல்

பொது மக்களுக்கான WC டிக்கெட்டுகள் :

ஆகஸ்ட் 25 இரவு 8 மணி IST முதல்: இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத நிகழ்வு போட்டிகள்

ஆகஸ்ட் 30 அன்று இரவு 8 மணி IST முதல் : கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய அணி போட்டிகள்

ஆகஸ்ட் 31 அன்று இரவு 8 மணி IST முதல்: சென்னை, டெல்லி மற்றும் புனேயில் நடைபெறும் இந்திய அணி போட்டிகள்

செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி IST முதல் : தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடைபெறும் இந்திய போட்டிகள்

செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி IST முதல் : பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய அணி போட்டிகள்

செப்டம்பர் 3 அன்று இரவு 8 மணி IST முதல் : அகமதாபாத்தில் நடைபெறும் இந்திய அணி போட்டி

செப்டம்பர் 15 அன்று இரவு 8 மணி IST முதல் : அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்

இந்திய அணி பங்குபெறும் போட்டிகள் விவரம் :

போட்டி எண்.  தேதி  அணி 1  அணி 2  இடம்  நேரம்
5 அக்டோபர் 8 இந்தியா ஆஸ்திரேலியா எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை பிற்பகல் 2:00
8 அக்டோபர் 11 இந்தியா ஆப்கானிஸ்தான் அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி பிற்பகல் 2:00
13 அக்டோபர் 14 இந்தியா பாகிஸ்தான் நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் பிற்பகல் 2:00
17 அக்டோபர் 19 இந்தியா பங்களாதேஷ் எம்சிஏ ஸ்டேடியம், புனே பிற்பகல் 2:00
21 அக்டோபர் 22 இந்தியா நியூசிலாந்து HPCA ஸ்டேடியம், ஹைதராபாத் பிற்பகல் 2:00
29 அக்டோபர் 29 இந்தியா இங்கிலாந்து ஏகானா ஸ்டேடியம், லக்னோ பிற்பகல் 2:00
33 நவம்பர் 2 இந்தியா இலங்கை வான்கடே ஸ்டேடியம், மும்பை பிற்பகல் 2:00
37 நவம்பர் 5 இந்தியா தென்னாப்பிரிக்கா ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா பிற்பகல் 2:00
43 நவம்பர் 12 இந்தியா தகுதிச் சுற்று 1 எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு பிற்பகல் 2:00