கேதர்நாத்: உத்தரகாண்டில்  இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக  கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள் நடைபெற்ற வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது, மாயமான ஹெலிகாப்டன்  குப்தகாஷி, கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உட்பட 6 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பயணம் செய்த பைலட்,  5 பெரியவர்கள், 1 குழந்தை  உள்பட 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.