லக்னோ:

அறுவடை நெருங்கும் நேரத்தில் மாடுகள் பயிரை மேய்வதால், பள்ளி,மேம்பாலம் கீழே, அரசு வளாகங்களில் உத்திரப் பிரதேச விவசாயிகள் அவற்றைப் பிடித்து அடைத்து வருகின்றனர். இது அம்மாநில அரசு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தடை காரணமாக அம்மாநிலத்தில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவை உணவுக்காக அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை மேய்ந்து விடுகின்றன.
இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

பலமுறை அரசிடம் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை.
வெறுத்துப் போன விவசாயிகள், பயிர்களை மேயும் மாடுகளைப் பிடித்து மேம்பாலம் கீழும், பள்ளி மற்றும் அரசு வளாகங்களிலும் வைத்துப் பூட்டி வருகின்றனர்.
இது உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.