சாரதா நிதி நிறுவன மோசடி: ப.சி. மனைவி நளினிமீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி:

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி  நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கணவர் சிதம்பரத்துடன் நளினி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறு வனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத் எதில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத் துக்கு ரூ.1.4 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுக்குள் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத் திடம் விசாரணை நடத்தி உள்ளன.  இந்த நிலையில்,  தற்போது சிபிஐ நீதிமன்றத் தில் நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CBI files chargesheet, Nalini Chidambram, Saradha scam, குற்றப்பத்திரிகை, சாரதா நிதி நிறுவன மோசடி, சிபிஐ, நளினி சிதம்பரம், ப.சி. மனைவி
-=-