லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலக அதிகாரிகள் சிலர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். இதனால், முதல்வரும் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், தனிமைப்படுத்திக்கொள்லதாக டிவிட் பதிவிஙட்டிருந்தார். இந்த நிலையில், அவரது சோதனை முடிவு வெளியானது. அதில், அவருக்கு, நேற்று வைரஸ் பாதிப்பு உறுதியானது. இருந்தாலும்,  வீட்டில் தனிமையில் சிகிச்சை பெறுகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகிறேன்’ என, கூறி இருந்தார்.

இந்த நிலையில், தொற்று பாதிப்பு குறையாத நிலையில், யோகி ஆதித்யநாத் இன்று அங்குள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவன  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

இதை  மாநல பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் ஸ்ரீவஸ்தவா  உறுதிப்படுத்தினார். “டாக்டர்களின் ஆலோசனையின்படி,  யோகி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பி.ஜி.ஐ.யில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஏற்கனவே மார்ச் 5ந்தேதி  கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை மார்ச் 5 அன்று எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.