லக்னோ:

பிப்ரவரி மாத சம்பளம் தாமதம் ஆவதைக் கண்டிக்கும் வகையில், உத்திரப்பிரதேச ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஊழல் ஹோலி போராட்டத்தை நடத்தினர்.


உத்திரப்பிரதேச ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்காததைக் கண்டித்து ராஷ்ட்ரிய ஷைஷிக் மஹாசங் என்ற பெயரில் போராட்டக் குழுவை ஆசிரியர்கள் அமைத்துள்ளனர்.

சம்பளத்தை தாமதப் படுத்துவதால் நிதிச் சுமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சம்பளம் தாமதம் ஆவதற்கு ஆரம்பக் கல்வி அதிகாரிகளே காரணம் என குற்றஞ்சாட்டிய அவர்கள், எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் ஹோலி என்று பெயரிட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம் என்றனர்.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்த ஆசிரியர்கள், இதே நிலை தொடர்ந்தால், தெருவில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையை கொண்டாடினோம். ஒவ்வொரு மாதமும் சம்பளம் தாமதம் ஆவதால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.