லக்னோ:
த்தர பிரதேச 5வது கட்ட தேர்தலில்இன்று காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவிகிதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5வது கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. 2.24 கோடி வாக்காளர்கள் உள்ள சுல்தான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு:

அமேதி 21.52%
அயோத்தி 24.60%
பஹரைச் 22.79%
பாராபங்கி 18.61%
சித்ரகூட் 25.69%
கோண்டா 22.34%
கௌசாம்பி 25.05%
பிரதாப்கர் 20%
பிரயாக்ராஜ் 18.62%
ரேபரேலி 20.11%
ஷ்ரவஸ்தி 23.17%
சுல்தான்பூர் 22.48%