ரியோ:
ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் ,உசைன் போல்ட், மூன்றாவது முறையாக இந்த ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.
ஜமைக்கா ஆண்கள் அணியின் 4X100 மீட்டர் தொடர் ஓட்ட அணிக்கு தலைமை தாங்கிய உசைன்போல்ட்,  அந்த  போட்டியில் ஜப்பான் அணியை வென்றார். ஜப்பான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
0
இந்த வெற்றியின் மூலம், மூன்று தொடர் ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொன்றிலும், மூன்று தங்கப்பதக்கங்களை போல்ட்  வென்று சாதனை புரிந்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “பந்தயத்துக்கு முன்னதாக, என் அணியின் சக ஓட்டப்பந்தய வீரர்களிடம், இந்தப் போட்டியில் எனக்காக  நீங்கள்  நன்றாக ஓடவேண்டும்.  இல்லையென்றால்  அடித்துத் துவைத்துவிடுவேன் என்று கூறினேன்” என்று போல்ட் தெரிவித்தார்.