டிரம்பின் நிர்வாண சிலைகள்: அமெரிக்காவில் பரபரப்பு!

Must read

 
சான்பிரான்சிஸ்கோ:
மெரிக்க எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்பின் நிர்வான சிலைகள் அமெரிக்கா முழுவதும் திடீரென  வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரும் அமெரிக்க அதிபர்  குடியரசு கட்சி சார்பாக  டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் கிலாரி கிளின்டன் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில் திடீரென அமெரிக்க நகரங்களின் முக்கிய வீதிகள், மால்களில், டிரம்பின் எதிர்ப்பாளர்கள்,  அவரது  நிர்வாண சிலைகளை நகரின் பல்வேறு இடங்களில் வைத்து தங்களது எதிர்ப்பை காட்டினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  டெனால்டு டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக அவரது  எதிர்ப்பாளர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவருக்கு எதிராக நூதன வழியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

டிரம்பின் முழு அளவு நிர்வாண சிலைகளை வடிவமைத்து அச்சிலைகளை அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, க்ளீவ்லாண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், ஷாப்பிங் மால்கள், பஸ்நிலையங்கள், பார்க்குகள் ஆகிய இடங்களில் வைத்து டெனால்டு டிரம்பை அவமானப்படுத்தினர்.
திடீரென ஆங்காங்கே டிரம்பின்  நிர்வாண சிலை காணப்பட்டதை பார்த்த அமெரிக்கவாசிகள்  பரபரப்பு அடைந்தனர். சிலர்  அவரது உருவலையை பார்த்து, சிரித்தனர். ஒரு சிலர் செல்பி எடுத்தனர்.

தகவலறிந்த போலீசார் சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். டிரம்பின் நிர்வாண சிலைகள் அமெரிக்காவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  இது யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

More articles

Latest article