270க்கும் மேற்பட்ட  இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்: சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி,

சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் 270க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா  திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது இதுகுறித்து பேசிய  அமைச்சர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படும் இந்தியர்களின் தகவல்களை இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கும் படி அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாத குடியேறிப்பவர்கள் இந்தியர்கள்தான் என்று எப்படி நம்புவது என கேள்வி எழுப்பிய சுஷ்மா, அவர்கள் குறித்த தகவல்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க அரசு தரும் தகவல்களை ஆராய்ந்தபின்  அவர்கள் இந்தியர்கள்தான் என்பதை உறுதிசெய்த பிறகு  நாடு கடத்தலாம் என்றும் அமைச்சர் சுஷ்மா கூறினார்.

அமெரிக்காவில் தற்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

 


English Summary
US Targets More Than 200 Indians For Deportation, Says Sushma Swaraj