அயோத்தி பிரச்னை தீர அரசு உதவவேண்டும்: ஷியா முஸ்லிம்கள் கோரிக்கை

லக்னோ,

உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தை ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மவுலானா யாசுப் அப்பாஸ் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.  விரைவில் தங்கள் கோரிக்கைகளுடன் முதலமைச்சரை சந்திக்க விருப்பதாகவும் அப்பாஸ் கூறினார்.

மேலும் அவர், ஷியா முஸ்லிம்களின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக ராஜிந்தர் சச்சார் குழு பரிந்துரைத்தபடி, தனிக்குழுவையோ அல்லது தனி ஆணையத்தையோ அமைக்கவேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தப்போவதாகவும் கூறினார்.

அயோத்திப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர், ராமர் ஜென்ம பூமி-பாபர்மசூதி பிரச்னையை இருசமூகத்தினரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார்.


English Summary
Shia cleric meets Yogi Adithyanath