sperm 4
அமெரிக்க விந்து (Sperm)வங்கி  நிறுவனம் ஒன்று,  தான் விற்ற  விந்தின் உரிமையாளர் ‘உளப்பிணியுடையவர் மற்றும் குற்றவாளி‘ என்பதை மறைத்து அறிவார்ந்த மேதை என மோசடி செய்ததால்  அதன் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
sperm bank 1
மூன்று கனடா குடும்பங்கள், பல மன நோய்கள் கண்டறியப்பட்டுள்ள, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை மேதை என்று கூறி அவர்களுக்கு விந்து வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஒரு விந்து வங்கி மற்றும் அதன் விநியோகஸ்தரின் மீது அவர்கள் மீது வழக்கு தொடுத்து வருகின்றனர். குறைந்தது 36 பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கப் பெண்கள், கடந்த பத்து வருடங்களில் விந்து கொடுப்பவரின் மூலம் விந்தனுவை செலுத்திக் கொண்டு கருவுற்றிருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.
sperm 3
“இது கொடூரம் தான். இந்த ஜோடிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க உதவி கோரி க்ரையோபாங்க் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்தால், இது போல் நடந்திருக்கிறது,” என்று வழக்கறிஞர் ஜேம்ஸ் ஃப்யர்மேன் தெரிவித்தார்.
இந்த வாரம் தாக்கல் செய்த கூற்றில், சில குடும்பங்கள் அமெரிக்காவிலுள்ள ஜோர்ஜியா மாகாணத்தை சார்ந்த சைடெக்ஸ் கார்ப், மற்றும் ஒன்டாரியோவிலுள்ள அவுட்ரீச் சுகாதார சேவைகள் தங்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடாக 15 மில்லியன் கனடிய டாலர்கள் ($ 11.7 மில்லியன்) கேட்டு வருகின்றனர்.
எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. விந்து நிறுவனம், விந்தனு கொடுப்பவரின் அறிவுத்திறன் பற்றி ஜோடித்ததாகவும் மேலும் அவர் மிகவும் ஆரோக்கியமானவர் மற்றும் நரம்பியல் பொறியியலில் இளநிலை படித்து வருகிறார் என்றும் கூறினர் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு குடும்பமும் அந்த மனிதனின் விந்தைப் பயன்படுத்தி ஒரு குழந்தையைப் பெற்றது. அதன் பின் சைடெக்ஸ் கவனக்குறைவாக அந்த மனிதரைப் பற்றிய தொடர்புத் தகவலை அவர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் சேர்த்த போது தான் அவர்களுக்கு அவரைப் பற்றிய உண்மையான அடையாளம் தெரிய வந்தது.
ஒரு விரைவான இணையத் தேடல் மற்றும் தொடர்ச்சியான விசாரணைக்குப் பின்னர்,  விந்தணு கொடுத்த ஜோர்ஜியாவை சேர்ந்த 39 வயது நபர்  உண்மையில் மனச்சிதைவு, சுயக்காதலுடைய தனிமனித இயல்புச் சீர்கேடு, மருந்து-தூண்டப்பட்ட உளப்பிணி மற்றும் குறிப்பிடத்தக்க பகட்டுத்தனமான மருட்சி இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொள்ளை மற்றும் இதர குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், இறுதியில் அவர் திரும்பி வந்து கடந்த ஆண்டு ஒரு இளங்கலை பட்டம் பெற்றார்.
sperm 2
இவ்வளவு முரண்பாடானத் தகவல் தந்த பின்னரும்  கூட விந்து நிறுவனம்  2014ல் அவரது விந்து விற்பதைத் தொடர்ந்தன.