புலிகளின் எண்ணிக்கை என்ன?

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

100 ஆண்டுகளில் முதல் முறையாக வனப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும், ஒரு நூற்றாண்டில் காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது, பல்வேறு அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட “மேம்படுத்தப்பட்ட புலிகள் பாதுகாப்பு” முயற்சிகளுக்கு நன்றி , என வன குழுக்கள் ஏப்ரல் 11 ம் தேதி கூறினர்.
WWF மற்றும் உலகளாவிய புலி கருத்துக்களம் தொகுத்த தகவல்களில், உலகளவில் காடுகளில் உள்ள  புலிகளின் தொகை 2010 ல் குறைந்தளவில் 3,200 ஆக இருந்தது இப்போது  3,890 ஆக உயர்ந்துள்ளது என்று   கணிக்கப்பட்டுள்ளது.
tiger count
இந்த அதிகரிப்பிற்கு பல காரணிகள் உள்ளது, முக்கியமாக, இந்தியா, ரஷ்யா, நேபால் மற்றும் பூடானின் புலிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பு, மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு என்று அவர்கள் கூறினர்.
புலி வரம்பிலுள்ள நாடுகள்  வேட்டைக்கு எதிரான உத்திகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் புலி பாதுகாப்பின் மூன்றாவது ஆசிய அமைச்சகக் கூட்டத்தை பிரதமர் தொடக்குவதற்கு முந்தைய  நாள் இந்த அறிக்கை வந்தது.
இந்த மாநாடு  உலக புலி முனைப்பு செயல்முறையில் சமீபத்திய நடவடிக்கை ஆகும், இதனுடைய தொடக்கம், 2022 ஆம் ஆண்டிற்குள் காட்டுப் புலியின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் Tx2 இலக்கை அரசாங்கங்கள் ஒப்புக் கொண்ட 2010 ஆம் ரஷ்ய புலி உச்சி மாநாடு ஆகும் .
 
 
சமீபத்திய கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் புலி எண்ணிக்கை 2,226 ஆக இருக்கையில் ரஷ்யாவிடம் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான 433 புலிகள் உள்ளது. இந்தோனேஷியாவிடம் 371 புலிகளும் மலேஷியாவில் 250 புலிகளும் உள்ளன.
வன குழுக்கள் தொகுத்த தரவின் படி, நேபால், தாய்லாந்து, வங்காளம் மற்றும் பூட்டானில் 198, 189, 106 மற்றும் 103 புலிகள் முறையே உள்ளது.
மியான்மார், சீனா, மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளிலும் புலிகள் உள்ளன.
2014 ஆம் ஆண்டில், முழுமையான மற்றும் முறையான தேசிய ஆய்வுகள் அடிப்படையில், ஒரு புதிய உலக புலி மதிப்பீடை 2016 ம் ஆண்டு அறிவிக்க புலி வரம்பிலுள்ள அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டன .
 
எனினும், அனைத்து நாடுகளும் இந்த ஆய்வுகளை முடிக்கவோ அல்லது வெளியிடவோ இல்லை, ஐயூசிஎன் மதிப்பீட்டிற்குப் பிறகு தேசிய புலிகளின் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன நாடுகளுக்கு அச்சுறுத்தும் இனங்களான புலிகளின் கணக்கு இருக்கும் ஐயூசிஎன் சிவப்புப் பட்டியலை அடிப்படையாக கொண்டு கிட்டத்தட்ட 3,900 புலிகள் வரை  புதிய குறைந்தபட்ச மதிப்பீடு என  மேம்படுத்தப்பட்டுள்ளது.
tiger count featured
 
 

More articles

Latest article