ஈரான்:
மெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய நீதித்துறையின் பிரதித் தலைவருமான
காசிம் க்ஹரிபாடி செய்தியாளரகளிடம் பேசுகையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்று குற்றம் சாட்டினார்.

ஈரானிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாட்டில் இதுவரை 7,560,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 144,609 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.