லண்டன்: காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர் கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவிக் கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. காற்று மாசு காரணமாக அங்குள்ள பள்ளிக்குழந்தைகள் சுவாசிப்பதற்கே சிரமப்படுகின்றனர். இதையடுத்து, காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57லட்சம் பேர் பலியாவதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.

கனடாவில் உள்ள  மெக்கில் பல்கலைக்கழக நிபுணா்கள் உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் காற்று மாசு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில்,  காற்றில் கலக்கும் மீச்சிறு துகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 57 லட்சம் பேர் அகால மரணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  மெக்கில் பல்கலைக்கழகம் வெளியிடுடுள்ள ஆய்வறிக்கையில்,  காற்றில் இருக்கும் 2.5 மைக்ரானோ, அதற்குக் குறைவாகவோ நீள அகலம் கொண்ட மீச்சிறு துகள் மாசுக்களை (பிஎம்2.5) நீண்ட நேரம் சுவாசிப்பதால் ஆண்டுதோறும் 42 லட்சம்  பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. எனினும், இது தொடா்பாக தாங்கள்  மேற்கொள்பட்டுள்ள ஆய்வில், பிஎம்2.5 மாசுபட்டால் கூடுதலாக 15 லட்சம் பேர்  பலியாகி வருவது தெரிய வந்துள்ளது என சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், ஆபத்தில்லாத மாசு  அளவு என்று இதுவரை கருதப்பட்ட குறைந்த அளவில் பிஎம்2.5 மாசு காற்றில் கலந்திருந்தாலும், அது மரணத்துக்கான அபாயத்தை ஏற்படுத்துவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?