வாஷிங்டன்

மெரிக்காவின் அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அமெரிக்க அதிபரின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுபவருமான ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜில் பைடனுக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.