அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஃபேல் நாடலும் விலகினார்!

Must read

பார்சிலோன்: தற்போதைய உலகின் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல், கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இப்போட்டித் தொடரிலிருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில முன்னணி நட்சத்திரங்கள் விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 31 முதல செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது அமெரிக்க ஓபன் டென்னிஸ்.

இந்நிலையில், இத்தொடரிலிருந்து விலகுவதாக மிக முக்கிய நட்சத்திரமான ரஃபேல் நாடலும் கூறியுள்ளது அப்போட்டிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

“உடல் நலன் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளேன். ஆனால், இது நான் விரும்பாத முடிவு” என்றுள்ளார் நாடல்.

More articles

Latest article