முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – பாகிஸ்தான் 326 ரன்கள்; இங்கிலாந்து தடுமாற்றம்!

Must read

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். பின்னர் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 94 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் துவக்க வீரர் ஷான் மசூட் 156 ரன்களை அடித்தார். பாபர் ஆஸம் 69 ரன்களும், ஷதாப் கான் 45 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆனார். கேப்டன் ஜோ ரூட் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ஓலி போப் 46 ரன்களுடனும்,ஜோஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

More articles

Latest article