முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து – 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

Must read

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள பாகிஸ்தான் அணி, 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஓலி போப் மட்டுமே அரைசதம்(62) அடித்தார். ஜோஸ் பட்லர் 38 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 19 ரன்களையும் அடித்தனர். ஸ்டூவர்ட் பிராட் 29 ரன்களை அடித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த இன்னிங்ஸில் 156 ரன்கள் விளாசிய துவக்க வீரர் மசூத் இந்தமுறை டக் அவுட் ஆனார்.

More articles

Latest article