வாஷிங்டன்:

மெரிக்காவில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1164 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  உலகம் முழுவதும் இதுவரை 70,446 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  \n\n\n\nஇதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 9 ஆக உயர்ந்து உள்ளது. ஆனால், அமெரிக்காவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1164 பேர் உயிரிழந்து உள்ளனர். இது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக வல்லரசான அமெரிக்கா நாட்டை புரட்டிப்போட்டு வருகிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9618-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது

அமெரிக்கா:

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நாட்டில் 1164க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 336,830 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

ஜப்பான்:

கொரோனா வைரஸ் பரவல் காலரணமாக ஜப்பானில் அவசரநிலையை பிரகடனப்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு 3654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டோக்கியோவில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  75 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். அங்கும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தாலி:

இத்தாலியில்  ஒரேநாளில் 525 பேர் உயிரிழந்தனர். அங்கு இதுவரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும்  69 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதுபோல,  2 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 525-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின்:

ஸ்பெயின் நாட்டில் நாளில் 694 பேர் பலியாகி உள்ளனனர். அங்கு இதுவரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 38,080 மேல் குணமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பலி எண்ணிக்கையும் 12, 641-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

பிரான்ஸ்:

பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8078-ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  உள்ள நிலையில், அதில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8078-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்து 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 518-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.