சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  70 ஆயிரத்தை  தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிம்பரில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றனர்.

இந்த கொடூர வைரஸ் பாதிப்புகளுககு உலக அளவில் இதுவரை 12, 86,294 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல,  உயிரிழப்பு 70,446 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,71,882 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின்  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கடந்த 2ந்தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

அதில்,  .காம்ரோஸ், க்ரிபாட்டி, லெசோட்டோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா, நவ்ரூ, வட கொரியா, பாலவ், சமெளவா, செளவ் டேம் மற்றும் பிரின்ஷிபி, சாலமன் தீவுகள், தென் சூடான், டஜிகிஸ்தான், டாங்கா, டர்க்மெனிஸ்டான், டுவாலு, ஏமன் மற்றும் வான்வாட்டு ஆகிய 18 நாடுகளில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கமே தென்படவில்லை என்று தெரிவித்து உள்ளது.

அதுபோல வடகொரியா உள்பட சில நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை வெளியே தெரிய விடாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும்,  போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனிலும் யாருக்கும் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.சில நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று கால் பதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிப்பதாக கூறி உள்ளது.

உலகில் மிகக் குறைவான வருகையாளர்களைக் கொண்ட 10 இடங்களில் ஏழு இடங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு அதிக அளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடு இத்தாலி என்றம், அங்கு  15,887 பேர் மரணித்து உள்ளதாகவும், ஸ்பெயின் – 13,055 பேரும், அமெரிக்கா – 9,620 பேரும்,  பிரான்ஸ் – 8,078 பேரும் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.