மாடர்னா கொரோனா தடுப்பூசி : அவசர ஒப்புதலுக்கு அமெரிக்கக் குழு ஆதரவு

Must read

வாஷிங்டன்

மெரிக்க மருத்துவ நிபுணர் குழு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசர  ஒப்புதலுக்கு  பரிந்துரை அளித்துள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இதுவரை இங்கு 1.76 கோடி பேர் பாதி9க்கப்பட்டு 3.17 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 70.17 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.   எனவே இங்கு கொரோனா தடுப்பூசியின் தேவை மிக மிக அதிக அளவில் உள்ளது.   ஏற்கனவே பிஃபிஸர் மற்றும் பயாண்டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவின் மற்றொரு நிறுவனமான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி கோரிய மனுவின் மீது மருத்துவர் குழு விவாதம் நடத்தியது.  இந்தக் குழுவில் மொத்தம் 21 பேர் உள்ளனர்.  விவாதத்தின் போது ஒருவர் வரவில்லை.  மற்ற அனைவரும் கலந்துக் கொண்டனர்.  இந்த விவாதத்தில் சோதனையின் அடிப்படையில் மாடர்னா தடுப்பூசி 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் முதியோருக்கும் அபாயம் அளிக்குமா என கேட்டு விவரங்கள் பெறப்பட்டன.

அதையொட்டி குழுவினர் அனைவரும் மாடர்னா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்க ஆதரவாக வாக்களித்துளன்ர்.   இந்த குழுவின் ஆதரவு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இந்த ஆதரவின் அடிப்படையில் கழகம் அவசர அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.  இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் இந்த மருந்து மேற்கத்திய நாடுகளில் அனுமதி பெற்ற இரண்டாம் மருந்து ஆகும்.

More articles

Latest article